கொரோனா வைரஸ்' தாக்கி இருக்கலாம் என, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை கண்காணிக்க, போலீசார் அறிமுகம் செய்துள்ள, 'மொபைல் ஆப்' வாயிலாக, 'டெலி மெடிசன்' அளிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது

சென்னை :


'கொரோனா வைரஸ்' தாக்கி இருக்கலாம் என, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை கண்காணிக்க, போலீசார் அறிமுகம் செய்துள்ள, 'மொபைல் ஆப்' வாயிலாக, 'டெலி மெடிசன்' அளிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என,ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் வீடுகளில், 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு உள்ளது. மேலும், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் கைகளில், முத்திரை குத்தப்பட்டு உள்ளது. அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதால், மற்றவர்களுக்கும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.